3000 முத்தங்களால் தமிழக முதல்வரின் படத்தை வரைந்தகல்லூரி மாணவர்!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் நரசிம்மன். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி ஆர்கிடெக்சர் படித்து வருகிறார். சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தன்னுடைய கலைத் திறனால், தஞ்சை பெரிய கோயில், அப்துல் கலாம் என பல்வேறு படைப்புகளை வரைந்துள்ளார். கையால் மட்டுமின்றி மூக்கு, உதடு ஆகியவற்றாலும் வரையும் திறமை கொண்டவர்.
தற்போது 3000 முத்தங்களால் தமிழக முதல்வரின் படத்தை வரைந்துள்ளார். வாலிகண்டபுரம் அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயத்திற்கு அருகே முதல்வரின் ஓவியத்தை வரைந்துள்ளார்.
பிக்மன்ட் என்ற கலவை கொண்ட பெயிண்டால் 3000 முத்தங்களால், 16 அடி நீளமும், எட்டரை அடி அகலம் கொண்ட துணியில் வரையப்பட்ட இந்த ஓவியத்தை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு வீடியோவாக அனுப்பவுள்ளார் நரசிம்மன்.
Tags :