அதானி குழுமம்

by Admin / 30-01-2023 11:53:20pm
அதானி குழுமம்

1980 களில் தம் வர்த்தக குழுமத்தை ஆரம்பித்த அதானி எரிசக்தி மற்றும் தளவாட வாணிகங்களில் ஈடுபட்டார்.ஏழுபொது வர்த்தக நிறுவனங்களுடன்$23 பில்லியன் வர்த்தக குழுமமாக உருவெடுத்தது,அதானிகுழுமம். சுவிஸ் ஹோல்சியிடமிருந்து சிமிண்ட் வணிகத்தை  வாங்கியது.இதற்குப்பிறகு அதானி உலக பணக்காரரானார்.இவருக்குபார்க்ஸ் வங்கி,டாய்ச் வங்கி,ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிகள் நிதி அளித்து உதவின.அமெரிக்க-ஐரோப்பா முதலீட்டுவங்கிகள் அதானி குழுமமத்திற்கு பங்கு விற்பனைக்கு துணை நின்றன.பில்லியன் கணக்கில் டாலர்களை வழங்கின.ஜே.பி .மோர்கன்,பாங்க் ஆப் அமெரிக்கா,மெரில் பிஞ்ச்கிரெடிட் சுவிஸ் நிறுவனங்கள் அதானியுடன் ஒப்பந்தம் செய்தன.2015-2021  வரை $10 வரை அதானி குழுமம் நிதி பெற்றுள்ளது.அத்துடன் அதானி குழுமம் முன்னுரிமை வரிச்சலுகைகளையும் பெற்றுள்ளது 2002 மார்ச் நிலவரப்படி $27 பில்லியன் கடன் வைத்துள்ளது.2020-2022 யில் 40 %இந்திய முன்னணி வங்கியில்[எஸ்.பி.ஐ] பெற்றுள்ளது. இன்றைய நிலவரப்படு அதானி குழுமம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது .இதிலிருந்து அது மீள்வதற்கான சாத்தியக்கூறுகளை காலம்தான் வழங்க முடியும்.

 

Tags :

Share via