இந்தியாவுக்கு வரும் இலங்கை தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் இலங்கை முன்னாள் எம்.பி பேட்டி

by Staff / 23-03-2022 12:47:54pm
இந்தியாவுக்கு வரும் இலங்கை தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்  இலங்கை முன்னாள் எம்.பி பேட்டி

இலங்கையில் விலைவாசி விஷமென விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாயாக உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் ஆயிரத்து 500 ரூபாய். 

இதுபோன்று அனைத்து காய்கறி விலையும் அதிகரித்து உள்ளது. ½ கிலோ பால்பவுடர் 900 ரூபாய். சமையல் கியாஸ் சிலிண்டர் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தாலும் கிடைப்பதில்லை.

இலங்கையில், 90 சதவீத பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் நிலையில், டாலர் கையிருப்பு இல்லாததால் பொருட்களை இறக்குமதி செய்யமுடியாமல் தவிக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் தற்போது ஐ.சி.யு.வில் (தீவிர சிகிச்சை பிரிவு) உள்ளது. 

இன்னும் மோசமடையத்தான் வாய்ப்பு உள்ளது. மீண்டு வர வாய்ப்பு இல்லை. தொடர்ந்து பொருளாதார சிக்கல் நீடித்தால் இலங்கை தமிழ் மக்கள் தமிழகம் வரும் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இலங்கை படைகளின் கெடுபிடி அதிகமாக இருப்பதால், முன்பு போல் ஆயிரக்கணக்கில் வரமுடியவில்லை. மக்கள் வர விரும்பினாலும் தடைகள் இருக்கிறது.

பட்டினி கிடந்து சாவதை விட, நடுக்கடலில் சுட்டுக்கொன்றாலும் பரவாயில்லை இந்தியாவிற்கு சென்றால் கஞ்சியாவது குடித்து, நிம்மதியாக தூங்கலாம் என்று வந்துவிடுவார்கள்  என தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த முன்னாள் எம்.பி. எம்.கே.சிவாஜிலிங்கம் நிருபர்களிடம் பேட்டியின்  போது தெரிவித்துள்ளார் .

 

Tags :

Share via