டிசம்பர் முதல் எத்தனால் பெட்ரோல்; அமைச்சர் தகவல்

by Staff / 15-10-2022 10:42:35am
டிசம்பர் முதல் எத்தனால் பெட்ரோல்; அமைச்சர் தகவல்

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை 2023ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே இந்தாண்டு டிசம்பர் அல்லது அடுத்தாண்டு ஜனவரியில் இது விற்பனைக்கு வரும் என நம்புகிறேன். நுகர்வோர் தங்களின் விருப்பத்தின் பேரில் எத்தனால் அல்லது பெட்ரோலை வாங்கிக் கொள்ளலாம். இதற்கான பணிகள் நடக்கி்றது" என்று கூறினார்.

 

Tags :

Share via

More stories