தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சிலதினங்களாக பரவலான மழைபெய்துவருகிறது.இன்று காலைமுதல் மயிலாடுதுறை, குத்தாலம், பாலையூர், மங்கைநல்லூர், மணல்மேடு, வில்லியநல்லூர், நீடூர், மன்னம்பந்தல், செம்பனார்கோவில், திருக்கடையூர், பொறையார், தரங்கம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் சாரல் மழை மற்றும் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, தாழனூர், செட்டித்தாங்கல், உள்ளிட்ட பகுதிகளிலும் அதேபோல் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர், மனம் பூண்டி, தேவனூர், முகையூர், கண்டாச்சிபுரம், ஆலம்பாடி பகுதிகளிலும் காலை முதல் மழை பெய்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான கண்ணமங்கலம் சேவூர் சந்தவாசல் வண்ணங்குளம் இரும்பேடு ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம், ராமநத்தம், வேப்பூர், இறையூர், முருகன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்பொழுது லேசான மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர் ஊத்துக்கோட்டை செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு சென்டிமீட்டர். ஆவடி பூந்தமல்லி சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சென்டிமீட்டர் என அதிகபட்சமாக பொன்னேரியில் நான்கு சென்டிமீட்டர் மழை பதிவு
Tags : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை.