திருப்பதி கோவில் உண்டியல் பணம் திருட்டு

வங்கியில் வேலை செய்யும் 50 ஊழியர்கள் 1 ஷிப்ட்டுக்கு 25 பேர் வீதம் 2 ஷிப்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், திலீப் என்பவர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டார். அவர், பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது தனது முகக்கவசத்தில் ரூ.94 ஆயிரத்தை மறைத்து வைத்து எடுத்துச் சென்றார். திலீப் மீது சந்தேகமடைந்த தேவஸ்தான அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். அப்போது திலீப் முகக்கவசத்தில் மறைத்து வைத்திருந்த ரூ.94 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 47 ரூ.2000 நோட்டுகளை மறைத்து வைத்து எடுத்து சென்றார். இதையடுத்து திலீப்பை பிடித்து திருமலை 1 டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப்பை கைது செய்தனர்.
Tags :