காளான் பறிக்க சென்ற 2 பெண்கள் கொலை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரிய வளையம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர்கள் மலர்விழி, கண்ணகி. இவர்கள் கடந்த 23ம் தேதி காலையில் காளான் பறிக்க வயலுக்குச் சென்றுள்ளனனர். ஆனால், இருவரும் வீடு திரும்பவில்லை. வீடு திரும்பாததால் பதறி போன பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்நிலையில் இருவரும் கொலைசெய்யப்பட்டுள்ளதை பார்த்தவர்கள் உடனே போலீஸுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதங்களை மீட்டு உடற்கூராய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதில், இருவரும் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் 6 பவுனைக் காணவில்லை எனவும், நகைக்காக கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :



















