சட்ட விரோதமாக கருவிலுள்ள குழந்தை ஆணா, பெண்ணா கண்டறிந்த 5 பேர் கைது

தருமபுரி: காரிமங்கலம் அருகே வீடு ஒன்றில் கர்ப்பணிகளுக்கு ஸ்கேன் இயந்திரம் மூலம் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என சட்ட விரோதமாக பாலினம் கண்டறிவதாக கிடைத்த தகவலின் பேரில், மருத்துவத்துறை இணை இயக்குநர் சாந்தி தலைமையிலான குழுவினர், நேரில் சென்று சோதனை மேற்கொண்டதில், பாலினம் கண்டறியும் கும்பல் இருப்பது உறுதியானது. பாலினம் கண்டறிந்த பயிற்சி செவிலியர் கற்பகம், கணவர் விஜயக்குமார், செல்வராகவன், சிலம்பரசன், வீட்டின் உரிமையாளர் சுபாஷ் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பாலினம் கண்டறிய பயன்படுத்தப்பட்ட ஸ்கேன் இயந்திரம், கார், ஆட்டோ, நான்கு செல்போன்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
Tags :