ஆட்டோ டிரைவரின் வங்கிக் கணக்கில் ரூ.9000 கோடி டெபாசிட்

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னையில் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 15ஆம் தேதி இவரது வங்கிக் கணக்கில் ரூ.9000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தவறுதலாக இவரது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ததாகவும், இது தொடர்பாக ராஜ்குமாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தனது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், முதலில் யாரோ சைபர் குற்றவாளிகள் இவ்வாறு மோசடி குறுஞ்செய்தி அனுப்புவதாக நினைத்துள்ளார். இறுதியில் வங்கி தரப்பில் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.21,000 மட்டும் ராஜ்குமார் தனது நண்பருக்கு அனுப்பியுள்ள நிலையில், அதனை திருப்பி தர வேண்டாம் என வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வரும் ராஜ்குமார், தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.15 மட்டுமே இருந்த நிலையில், இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததால் அதிர்ந்து போயுள்ளார். இந்த பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையில் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Tags :