திருச்செந்தூர் முருகன் கோவில் இன்று மாசித் தேரோட்டத் திருவிழா

by Admin / 23-02-2024 12:50:49pm
திருச்செந்தூர் முருகன் கோவில் இன்று  மாசித் தேரோட்டத் திருவிழா

குரு ஸ்தலமாக கருதப்படும் திருச்செந்தூரில் இன்று அதிகாலையில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தேறியது. திருச்செந்தூர் முருகன் கோவில் இன்று மாசித் திருத் தேரோட்டவிழா  முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீப ஆராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது .பின்னர் சுவாமி குமர விடங்க பெருமாள் ,வள்ளி தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்  ரத வீதிகள் வழியாக திருத்தேர் வலம் வந்து பின்னர் நிலைக்கு வந்தது .. மாசி தேரோட்டத்தில் சுவாமியை தரிசிப்பதற்காக அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததோடு அலகு குத்தியும் காவடி எடுத்தும் தங்களுடைய நேர்த்தி கடனை முருகனுக்கு செலுத்த வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் முருகன் கோவில் இன்று  மாசித் தேரோட்டத் திருவிழா
 

Tags :

Share via