அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க

by Staff / 23-02-2024 12:58:49pm
அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதாவை அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க கூட்டணியில் 5 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க கூட்டணியில் தே.முதி.க இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via