ஆப்கானிஸ்தானின்  புதிய அதிபர் அறிவிப்பு ?

by Editor / 21-08-2021 05:35:43pm
ஆப்கானிஸ்தானின்  புதிய அதிபர் அறிவிப்பு ?


தாலிபான் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான அப்துல் கனி பரதர், ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலும் தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்ததையடுத்து, அந்த நாடு முழுவதும் தலிபான் வசமாகியுள்ளது. இந்த நிலையில், அதிபராக இருந்து வந்த அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதை அடுத்து, அங்கு ஆட்சி அமைக்கும் பணியை தலிபான்கள் தொடங்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக தாலிபான் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான அப்துல் கனி பரதரை நியமிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காபூலில் ஜிஹாதி தலைவர்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்க தாலிபான்கள் பேச்சுநடத்தி வருவதாக கூறப்படுகிறது.


அப்துல் கனி பரதர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் அழுத்தத்தின் பேரில் பாகிஸ்தானில் கடந்த 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அப்துல் கனி பரதர் 8 ஆண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். டிரம்ப் நிர்வாகம் 2018ல் தலிபான்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியபோதுதான் அவர் விடுவிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு கத்தாருக்கு நாடு கடத்தப்பட்ட அதுப்துல் கனி பரதர் அங்கு தோஹாவில் உள்ள தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் அப்துல் கனி பரதரும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.

 

Tags :

Share via