கால்பந்தில் அசத்தும் வாரிசு நடிகர்..! அப்போ அரசியலுக்கு வரமாட்டாரோ?

by Admin / 27-08-2021 04:53:35pm
கால்பந்தில் அசத்தும் வாரிசு நடிகர்..! அப்போ அரசியலுக்கு வரமாட்டாரோ?

 

பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் செய்யும் செயல்கள் மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினர் செய்யும் செயலையும் ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருவர்.

பொதுவாக செல்வாக்கு படைத்தவர்களின் குழந்தைகள் பெரிய அளவில் எதையும் சாதிக்க மாட்டார்கள் என்ற மாயையான பிம்பம் உண்டு. அதனை தகர்த்து எறியும் விதமாக பல நடிகர்களின் பிள்ளைகள் பலத்துறைகளில் சாதனை படைப்பது உண்டு.

உதாரணமாக நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற லத்வியன் ஓப்பன் நீச்சல் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தினார். அதேபோல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியராக பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக உதயநிதியின் மகன் கால்பந்தில் தனது கவனத்தை செலுத்தி சத்தமே இல்லாமல் சாதனை படைத்து வருகிறார். என்ன செய்திருக்கிறார் என பார்க்கலாம்.. முதலமைச்சர் ஸ்டாலினின் பேரனும், உதயநிதியின் மகனுமான இன்பன் உதயநிதி மனிப்பூரை சேர்ந்த கால்பந்து அணியில் தேர்வு செய்யப்பட்டு, north east re organising cultural association கிளப் சார்பாக லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் மிக முக்கிய தொழில் முறை கால் பந்து போட்டிகளில் லீக் கால்பந்து போட்டியும் ஒன்று. 2007-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், 21 அணிகள் உள்ளன. 2021-2022-ம் ஆண்டு லீக் கால்பந்து போட்டியில் களமிறங்கும் அணிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நெரோகா கால்பந்து கிளப் சார்பில் போட்டியிட இன்பன் உதயநிதி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதனை நெரோகா அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதேபோல உதயநிதி ஸ்டாலினும் இதனை பெருமையோடு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். கால்பந்து விளையாட்டில் defender-ஆ விளையாடி வரும் இன்பன் உதயநிதி, சென்னையில் max sports academy-ல பயிற்சி பெற்று வருகிறார்.

அரசியலில் வருவதற்கு முன்பு எப்படி உதயநிதி திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தாரோ அதேபோல, இன்பன் உதயநிதி தற்போது கால்பந்தில் ஜொலிக்கத் துவங்கியிருக்கிறார். கலைஞரின் பரம்பரையில் முதன்முறையாக ஒருவர் கால்பந்து விளையாட்டில் சாதனை படைத்துக் கொண்டிருப்பது இதுவே முதன்முறை. முதலமைச்சர் ஸ்டாலினின் பேரனும், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியின் மகனுமான இன்பனுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via