உடல் உறுப்பு வியாபாரம்: விசாரணையை ஏற்கும் என்ஐஏ?

by Staff / 21-05-2024 03:42:40pm
உடல் உறுப்பு வியாபாரம்: விசாரணையை ஏற்கும் என்ஐஏ?

உறுப்பு தானத்திற்காக ஈரானுக்கு தனிநபர்களை சட்டவிரோதமாக கடத்துவது தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்த தயாராகியுள்ளது. இந்த வழக்கை தற்போது கேரளாவின் நெடும்பசேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஹைதராபாத், பெங்களூரு, பாலக்காடு போன்ற இடங்களில் இருந்து இதுவரை 20 பேர் ஈரானுக்கு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஈரானில் உள்ள ஃபரிதி கான் மருத்துவமனையில் உறுப்பு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. பெரும்பாலும் சிறுநீரகம் (கிட்னி) மாற்றப்பட்டுள்ளது.இது தொடர்பாக திருச்சூர் வாழப்பாடு பகுதியைச் சேர்ந்த சபித் நாசர் (30) என்பவரை போலீசார் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

Tags :

Share via