அதிகம் பாரம் இருந்ததால் விரைவு ரயில் 45 நிமிடங்கள் காலதாமதமாக சென்றது.

by Editor / 21-10-2023 10:51:13am
அதிகம் பாரம் இருந்ததால் விரைவு ரயில் 45 நிமிடங்கள் காலதாமதமாக சென்றது.

யணிகள் ரயிலில் சரக்குகளை எடுத்துச் செல்லும் பெட்டியில் அதிகம் பாரம் இருந்ததால் விரைவு ரயில் 45 நிமிடங்கள் காலதாமதமாக சென்றது.

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் இன்று காலை நடைமேடை  3 க்கு வந்த பெங்களூரு  கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின்  எஞ்சின் பின்புறம் உள்ள சரக்கு பெட்டியில் அதிக பாரம் ஏற்றியதால் இரண்டு பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் இருந்து சத்தம் வந்தது இதனால் ரயிலை நிறுத்தி சரக்கு பெட்டியில் இருந்து பாதி அளவு சரக்குகளை நடைமேடையில் இறக்கிவிட்டு 45 நிமிடங்கள் காலதாமதமாக பெங்களூரு கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடியிலிருந்து புறப்பட்டு சென்றது.
 

 

Tags : பெங்களூரு  கவுகாத்தி எக்ஸ்பிரஸ்

Share via

More stories