காட்டு யானைகளுக்கு பரவும் கொடிய வைரஸ்

by Staff / 21-05-2024 03:44:39pm
காட்டு யானைகளுக்கு பரவும் கொடிய வைரஸ்

கேரளாவில் காட்டு யானைகளுக்கு பரவும் கொடிய வைரஸ் அவற்றின் உயிரைப் பறித்து வருகின்றன. ஹெர்பெஸ் வைரஸ்கள் காரணமாக யானைக் குட்டிகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதை ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வைரஸ்கள் யானை எண்டோதெலியோட்ரோபிக் ஹெர்பெஸ்வைரஸ் (EEHV) மற்றும் எலிஃபான்டிட் பீட்டாஹெர்பெஸ்வைரஸ் 1 (ELH,V-1) ஆகும். இந்த வைரஸ்கள் குட்டி யானைகளை பெரிதும் பாதிக்கின்றன. குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மரபணு கோளாறுகள் ஏற்பட்டு குட்டிகளுக்கு மரணத்தை ஏற்படுத்திவிடுகின்றன.2015 முதல் 2022 வரையிலான ஏழு வருட காலப்பகுதியில், இந்த கொடிய வைரஸ்களுக்கு குட்டிகள் உட்பட 678 காட்டு யானைகள் பலியாகியுள்ளன. இவற்றில் 275 யானைகள் பத்து வயதுக்கு உட்பட்டவை. 10 முதல் 20 வயது வரையிலான 155 யானைகளும் உயிரிழந்து ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via

More stories