தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.9.5 கோடி வருமானம்.

by Editor / 27-10-2022 09:14:35pm
தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.9.5 கோடி வருமானம்.

தீபாவளி பண்டிகை கடந்த 24ம் தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலிருந்து சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், பேரூந்துக்கள் இயக்கப்பட்டன.

தீபாவளி பண்டிகையையொட்டி ஏராளமானவர்கள் சென்னை,கோவை,பெங்களூரு,திருச்சி,சேலம்,என பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று வந்தனர். இதனால் பேரூந்துக்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பிலும் விரைவு போக்குவரத்துக்கழகம் மூலமும்  16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த 20-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை இந்த சிறப்பு பேரூந்துக்கள்  இயக்கப்பட்டன.
இந்த நிலையில், தீபாவளி சிறப்பு  பேரூந்துக்கள் மூலம் போக்குவரத்துக்கு கழகங்களுக்கு ரூ.9.5 கோடி அளவுக்கு வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சிறப்பு பேருந்துகள் மூலம் 2.80 லட்சம் பயணிகள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன் பதிவு மூலமும்,நேரடியாக பயணித்தவர்கள் மூலமும் என தனித்தனி வருமான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

மேலும் இந்தாண்டு தனியார் நிறுவனங்களின் ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக முன்பதிவு செய்யும் வசதி இல்லாத நிலையும், ஜி பே மூலமாக முன்பதிவு செய்து பணம் கழிந்தும் பயணச்சீட்டு கிடைக்காமல் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.அரசு விரைவுபோக்குவரத்துக்கழக  முன்பதிவு மையங்களில் கூடுதல் விலைக்கு பயணச்சீட்டுக்கள் விற்பனையும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via