ஒரே பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட போட்டியில் கல்லூரி மாணவர் கார் ஏற்றிக் கொலை.

சென்னை அண்ணா நகரில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் நிதின் சாய் உயிரிழந்தார். காரை ஏற்றி இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர் தனசேகரனின் பேரன் சந்துரு காவல் நிலையத்தில் சரணடைந்தார். ஒரே பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட போட்டியில், தாக்கப்பட்ட இளைஞருக்கு ஆதரவாக பேசச் சென்ற கல்லூரி மாணவர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : ஒரே பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட போட்டியில் கல்லூரி மாணவர் கார் ஏற்றிக் கொலை.