ஈரான் மீது கை வைத்தால் கடுமையான விளைவு ஏற்படும்- ரஷ்யா எச்சாிக்கை.

by Admin / 14-01-2026 12:46:48pm
ஈரான் மீது கை வைத்தால் கடுமையான விளைவு ஏற்படும்- ரஷ்யா எச்சாிக்கை.

ஈரானில் உள்நாட்டு பொருளாதாரச் சரிவின் காரணமாக அதிகரித்த விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளை மையப்படுத்தி உள்ளூர் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு இணையதளங்கள் முடக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையதள வசதியை பெற்று தங்கள் தகவல் தொடர்பை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தி வந்த சூழலில் அதுவும் அரசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சூழலில், அங்கு நிலைமை கட்டுக்கடாமல் மோசமாகி வருகிறது. இந்நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா குரல் கொடுத்து வருகிறது. அப்பாவி பொதுமக்கள் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் ஈரானில் உயிரிழந்து உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில் அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுக்கலாம் என்கிற நிலைமை உருவாகி இருக்கிறது. இதற்கு ரஷ்யா மிகக் கடினமாக எச்சரித்து உள்ளது. ஈரான் மீதான தாக்குதல் மத்திய கிழக்கில் ஒரு போா்  அழிவை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நிகழ்த்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. அதோடு ,ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையான பதட்டம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் இறையாண்மையை பாதுகாப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அமெரிக்கா இதில் தலையிட்ட நிலைமை மோசமாகும் என்றும் ரஷ்ய வெளிஉறவுத்துறை தெரிவித்துள்ளது .ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அல்லது எண்ணெய் வளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது உலக பொருளாதாரத்திலும் பாதுகாப்பு சேவையிலும் ஈடு கட்ட முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என ரஷ்ய அதிபர் புதின் தரப்பு எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via