தமிழ்நாட்டிற்குள் மீண்டும் வந்த கொரோனா.. 3 பேர் பாதிப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சென்னையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 32 பேரிடம் செய்யப்பட்ட பரிசோதனையில் ஒரு பெண் உட்பட 3 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் உடல் நலம் நன்றாக இருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Tags :