ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்

by Staff / 20-12-2022 05:10:07pm
 ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நடிகர் ரஜினி ரசிகர் மன்றத்தின் நகர செயலாளராக இருந்த கார்த்திகை சாமி என்பவர் இன்று மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் முன்னிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுக அணியில் இணைந்தார். அவருக்கு சால்வை அணிவித்து ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைத்து கொண்டார். இதில் உசிலம்பட்டி அதிமுக நிர்வாகிகள் பிரபு, சசிகுமார், ஜெயக்குமார், அய்யனார்குளம் ஜெயக்குமார், போதிராஜன், தாடையாம்பட்டி ஐய்யர், மாணவரணி செயலாளர் பிரபாகரன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

 

Tags :

Share via

More stories