சொத்து தகராறு தந்தைக்கு கத்தி குத்து

புதுக்கடை அருகே கைசூண்டி பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் செல்லசாமி(70). இவருக்கு மகன் சிவகுமார்(37), சிவராஜ்(33) ஆகிய மகன்கள் உள்ளனர். இதில் சிவராஜுக்கும் தந்தைக்கும் சொத்து சம்மந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தினம் செல்லசாமி வீட்டில் இருக்கும்போது அங்கு வந்த மகன் சிவராஜ், எனக்கு சொத்து எழுதி தரமாட்டியா என கேட்டு கத்தியால் குத்தி தந்தையின் கை நரம்பை கிழித்துள்ளார். இதில் படுகாயமடைந்த செல்லசாமி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிவகுமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :