அணை மதகில் உடைப்பு- நீரில் அடித்து செல்லப்பட்ட மீன்களை அள்ளி செல்லும் பொதுமக்கள்...

by Admin / 09-08-2021 05:11:19pm
அணை மதகில் உடைப்பு- நீரில் அடித்து செல்லப்பட்ட மீன்களை அள்ளி செல்லும் பொதுமக்கள்...

ஆந்திரா - தெலங்கானா மாநில எல்லையில் உள்ள நீர்தேக்க அணையில் மதகு உடைந்து வெளியேறிய நீரில், ஆயிரக்கணக்கான மீன்கள் அடித்துச் செல்லப்பட்டன.
 
 ஆந்திரா - கர்நாடக மாநில எல்லையில் புளிசிந்தலா என்னும் பகுதியில் நீர்தேக்க அணை அமைந்துள்ளது. இந்த புளிசிந்தளா அணையில்  16 மதகுகள் அமைந்துள்ள நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பாக 16 வது மதகு உடைப்பு ஏற்ப்பட்டு நீர் வெளியேறியது. அதன்பின்னர் அணையில் இருந்த நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, அணையின் மதகு சரிசெய்யப்பட்டது..
 
இதற்கிடையில் அணையிலிருந்து வெளியேறிய நீரில் பல டன் எடையிலான மீன்கள் ஆந்திரா மாநில பகுதியில் உள்ள கிராம பகுதிகளுக்கு அடித்து செல்லப்பட்டது. இவ்வாறு அடித்து செல்லப்பட்ட மீன்கள் அங்குள்ள   வயல்வெளிகள் குட்டைகள் சமவெளி என அனைத்து பகுதிகளிலும் பரவி குவிந்து காணப்பட்டது. அந்த மீன்களை சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை குட்டையில் இறங்கி முந்தியடித்துக் கொண்டு அள்ளி சென்றனர்.

 

Tags :

Share via