கழிவறையில் குழந்தை பெற்றெடுத்து கொடூரமாக கொன்ற பெண்

அரியலூரில் இளம் பெண் அரசு மருத்துவமனை கழிவறைக்குள் தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்ற நிலையில், பச்சிளம் குழந்தையை கழிவறைக்குள் அமுக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகாத லாரா (20) என்ற பெண் தான் இந்த கொடூர செயலை செய்திருக்கிறார். கழிவறையின் கோப்பையை உடைத்து போலீசார் குழந்தையின் சடலத்தை வெளியே எடுத்தனர். லாரா கைது செய்யப்பட்டார். குழந்தையின் தந்தை யார் என்று விசாரணை நடக்கிறது.
Tags :