காதல் விவகாரம்: தட்டிக் கேட்ட நபர் வெட்டிக் கொலை

by Editor / 23-05-2025 12:54:31pm
காதல் விவகாரம்: தட்டிக் கேட்ட நபர் வெட்டிக் கொலை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (40). இவர் முடி திருத்தும் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று (மே 22) இரவு கடைக்குள் புகுந்த சிலர் காளிதாஸை வெட்டிக் கொலை செய்துள்ளனர். விசாரணையில், காளிதாஸின் அண்ணன் மகளை அவர்களின் உறவினரான மணி என்பவர் காதலித்துள்ளார். இதனை காளிதாஸ் தட்டிக் கேட்டுள்ளார். மேலும், தனது கடையில் பணிபுரிந்து வந்த மணியை வேலையைவிட்டு நிறுத்தியுள்ளார். ஆத்திரமடைந்த மணி காதலுக்கு இடையூறாக இருக்கும் காளிதாஸை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

 

Tags :

Share via