தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின்  கூட்டமைப்பினர்  முதல்வருடன்  சந்திப்பு.

by Editor / 28-10-2023 08:11:08pm
 தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின்  கூட்டமைப்பினர்  முதல்வருடன்  சந்திப்பு.

 தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின்  கூட்டமைப்பின் சார்பில் இன்று  தமிழ்நாடு முதலமைச்சரை  சந்தித்து நிலுவையின்றி அகவிலைப்படி உயர்வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு,நிலுவையில் இருக்கின்ற பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும், ஈட்டிய விடுப்பினை சரன்  செய்து பணப்பயன் பெறும் சலுகையை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும், 21 மாத ஊதியக்குழு நிலுவையை வழங்க வேண்டும் எனவும்,காலி பணியிடங்களை நிரப்புவதோடு,வெளிமுகமை (outsourcing)மூலம் நிரப்புவதை முழுமையாக கைவிட கோருதல், சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புர நூலகர்கள் எம்.ஆர்.பி. செவிலியர்கள், துப்புறவு பணியாளர்கள், NMR பணியாளர்கள், OHT இயக்குபவர்கள் உள்ளிட்டவர்களை பணி நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வழங்கிட கோருதல்,15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஈப்புகளை கழிவு நீக்கம் செய்து விட்டு புதிய ஈப்புகளை வழங்கு கோருதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் பணிபுரிகின்ற அலுவலர்களை அரசு அலுவலர்களாக ஏற்கும்  கோரிக்கை நிலுவையில்  இருப்பதை உடனடியாக ஏற்று அறிவிக்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சரிடம் விரைவில் நிறைவேற்றுமாறு கோரியதைத்தொடர்ந்து  அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து படிப்படியாக அறிவிப்பதாக முதல்வர் உத்திரவாதம் அளித்துள்ளதாக தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் (ம)  உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு.மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள்.த.அமிர்தகுமார்,முனைவர் செ.பீட்டர்அந்தோணிசாமி,ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

 

Tags :  தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின்  கூட்டமைப்பினர்  முதல்வருடன்  சந்திப்பு.

Share via