சாராயவியாபாரி கைது.

by Editor / 30-06-2024 09:51:10am
சாராயவியாபாரி கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் மணிகண்டன் (50). சாராய வியாபாரி. இவரை விசாரணைக்காக கடந்த 27ஆம் தேதி சங்கராபுரம் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்தனர். நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காவல் நிலையத்தில் இருந்து, மணிகண்டன் தப்பியோடினார். சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில், சேஷசமுத்திரம் கிராமத்தில் ஏரிக்கரை அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியிருந்த மணிகண்டனை போலீசார் சுற்றி வளைத்து  கைது செய்தனர்.

 

Tags : சாராயவியாபாரி கைது.

Share via

More stories