கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர்.

by Editor / 24-08-2022 09:30:50am
கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக கொங்கு மண்டலம் பகுதிக்கு நேற்று சென்றுள்ளார். 24ஆம் தேதியான இன்று கிணத்துக்கடவு பகுதியில் நடக்கும் அரசு விழாவில் கலந்துகொண்டு 1லட்சத்துக்கு 7 ஆயிரத்துக்கு 62 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் விடுபட்ட திட்டங்களையும் திறந்து வைக்கிறார். தொடர்ந்து நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் ஏராளமான மாற்று கட்சியினர் திமுகவில் தங்களை இணைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. தொடர்ந்து 25-ம் தேதி திருப்பூருக்கு செல்லும் முதல்வர் அங்கு சிறு, குறு சிறுவனங்கள் சார்பில் நடைபெறும் ‘தொழிலுக்கு தோள்கொடுப்போம்’ மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஈரோடு செல்லும் முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

 

Tags :

Share via