திமுகவின் நாடகம் இனி தமிழகத்தில் எடுபடாது; ராஜேந்திர பாலாஜி
திமுக அமைச்சர்கள் தொடர்ந்து பெண்களை இழிவாகப் பேசி வருவதை அனைத்து நிகழ்ச்சிகளிலும் செய்து வருகின்றனர். இதை திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக தலைவர், திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் அனைவரும் மௌனம் காப்பதாகவும், மற்ற அனைத்து கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
முதல்வரின் கட்டுப்பாட்டில் எந்த ஒரு அமைச்சரும் இல்லை எனவும், திமுக கட்சியே முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளதா என சந்தேகம் எழுகிறது என்றும், திமுக அமைச்சர்கள் இடையே ஈகோ இருப்பதாகவும், தான் தோன்றித்தனமாக திமுக கட்சிக்குள் குழப்பம் இருப்பதாகவும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொன்முடியை கைது செய்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்திருக்க வேண்டும் என்றார்.
திமுகவினருக்கு இந்தப் பதற்றத்தின் காரணமாக திமுக ஆட்சியில் தொலைபேசியை ஒட்டுக்கேட்பது மட்டுமே அது அவர்களுக்குச் சாதாரணமானது. திமுக அரசியலில் கேவலமான எதையும் செய்வார்கள். திமுகவினர் கீழ்த்தரமான அரசியல் செய்யக்கூடியவர்கள். திமுகவினர் அதிகாரத்தை விஸ்வரூபம் செய்தே வாழ்ந்தவர்கள். திமுகவின் நாடகம் இனி தமிழகத்தில் எடுபடாது. திமுக கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சியும் முழு மனதுடன் அங்கு இல்லை. அங்கு உள்ள அனைவரும் சூழ்நிலைக் கைதியாகவே இருக்கின்றனர். எந்த நேரத்திலும் திமுக கூட்டணி உடையும். அந்தக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் மனவேதனையில் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
Tags :



















