டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

by Editor / 22-04-2025 02:41:05pm
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

தமிழ்நாட்டில் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளின் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு தலா ரூ.2000 என்ற அளவில் சம்பளம் உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் தொகுப்பூதிய முறையில் பணியாற்றும் 23,629 பணியாளர்கள் பயனடைவார்கள். இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

 

Tags :

Share via