திருநெல்வேலி - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து.
திருநெல்வேலி - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் திருநெல்வேலி IRT பாலிடெக்னிக் கல்லூரி அருகில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து திருநெல்வேலி ஐ.ஆர்.டி பாலிடெக்னிக் அருகே வரும் பொழுது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். 25 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : திருநெல்வேலி - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து.