செந்தில் பாலாஜியை புகழ்ந்து பேசிய ஜோதிமணி எம்.பி.

by Staff / 23-06-2024 01:09:22pm
செந்தில் பாலாஜியை புகழ்ந்து பேசிய ஜோதிமணி எம்.பி.

தேர்தல் களத்தில் செந்தில் பாலாஜி இல்லை என்று கொண்டாடியவர்களுக்கு, மக்களின் பேரன்போடும், பேராதரவோடு நாங்கள் இரண்டாவது முறையாக பெற்ற மகத்தான் வெற்றி, பதிலடி தந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி என கரூர் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த காலத்தில் அமைச்சர் பணியோடு சேர்த்து, மாவட்ட செயலாளராக செலுத்திய அசுர உழைப்பும், இடைவிடாத தேர்தல் பணிகளும், அவர் களத்தில் இல்லாத இந்த நேரத்திலும் உறுதுணையாக இருந்தது.அவர் நேரடியாக பங்கேற்க முடியவில்லையென்றாலும், கடந்த காலங்களில், அவர் இரவு பகலாக உழைத்து உருவாக்கி, பயிற்சியளித்து, வழிநடத்திய கரூர் மாவட்ட திமுக ஒரு படை போல நின்று, அர்ப்பணிப்போடு பணியாற்றி, இந்தியா கூட்டணியை வழிநடத்தி கரூர் மாவட்டத்தில் மீண்டுமொரு மகத்தான வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo