by Staff /
05-07-2023
01:49:22pm
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் ஜூலை 4 ஆம் தேதி பயங்கர விபத்து ஒன்று நடந்தது. ராஞ்சி - பாட்னா நெடுஞ்சாலையில் பத்மா - ரோமி அருகே சென்றபோது, டாடா சுமோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதி சாலையோர கிணற்றில் விழுந்தது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த போது காரில் ஒன்பது பேர் இருந்தது குறிப்பிடத்தக்கது. போலீசார் ஜேசிபி உதவியுடன் கிணற்றில் இருந்து காரை வெளியே எடுத்தனர். உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது.
Tags :
Share via