நிபா வைரஸ் எதிரொலி; தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

by Editor / 05-09-2021 11:54:25am
நிபா வைரஸ் எதிரொலி; தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் சத்தமங்கலம் கிராத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு கடந்த 3ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மூளை அழற்சி மற்றும் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மத்திய அரசின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையக் குழுவினர் கேரளாவிற்கு விரைந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறித்தியுள்ளார்.

 

Tags :

Share via

More stories