அடித்துக் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரிப்பு- மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

by Admin / 21-12-2021 04:32:56pm
அடித்துக் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரிப்பு- மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

   
2014-ம் ஆண்டுக்கு முன்பு ‘அடித்துக் கொலை’ என்ற வார்த்தையையே பலர் அறிந்திருக்க மாட்டார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

இந்தியாவில் ’அடித்துக் கொலை’ செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

2014-ம் ஆண்டுக்கு முன்பு ‘அடித்துக் கொலை’ என்ற வார்த்தையையே பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்தவுடன் இதுபோன்ற கொலை தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. 

இவ்வாறு ராகுல் காந்தி தமது ட்விட்டர் பதிவில்  தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் அடுத்தடுத்து இரண்டு பேர்  கும்பல் ஒன்றால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.

சீக்கிய மதத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில்  ராகுல்காந்தியின் இந்த ட்விட்டர் பதிவு அரசியல் பார்வையாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo