கரூர் பலி-அனைத்து குடும்பங்களுக்கும் அனைத்து உதவியும் செய்யப்படும்-விஜய்.
கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய், இன்று (அக்.27) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியே சந்தித்து பேசிய அவர், சுயதொழில், வீடு மற்றும் கடன்பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் ஆதரவாக நிற்பதாக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்கு பொறுப்பேற்பதாகவும், மாதம் ரூ.5,000 வரை வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
Tags : கரூர் பலி-அனைத்து குடும்பங்களுக்கும் அனைத்து உதவியும் செய்யப்படும்-விஜய்.



















