மனிதனை போன்று யானைகள் குடும்பத்தை பாதுகாக்கும் விதம் வீடியோ வைரல்.

by Editor / 17-05-2024 12:01:52am
மனிதனை போன்று யானைகள் குடும்பத்தை பாதுகாக்கும் விதம் வீடியோ வைரல்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகள் யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள் உட்பட பல்வேறு வன விலங்குகளின் புகலிடமாக விளங்கி வருகின்றன. 

இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஒரு காட்டு யானைக் கூட்டம் உலா வருகிறது. குட்டியுடன் உலா வரும் இந்த யானைக் கூட்டம், அடர் வனப்பகுதியில் ஒரு இடத்தில் ஓய்வெடுத்துள்ளன. அப்போது குட்டி யானை உறங்க, பாதுகாப்பிற்காக அதனைச் சுற்றி 3 யானைகள் படுத்து உறங்கியுள்ளன. 

குட்டி யானை உட்பட 4 காட்டு யானைகள் தரையில் படுத்து கால் நீட்டி உறங்க, ஒரு பெண் யானை உறங்கும் யானைகளுக்கு காவலாக நின்றிருந்தது. இந்த அழகிய காட்சிகளை அப்பகுதியில் இருந்த புகைப்படக் கலைஞர் வீடியோ எடுத்துள்ளார். இந்தக் காட்சிகளை தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு:

தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் ஆழமான காடுகளில் எங்கோ ஒரு அழகான யானைக் குடும்பம் ஆனந்தமாக உறங்குகிறது.  குட்டி யானைக்கு குடும்பத்தால் இசட் வகுப்பு பாதுகாப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதைக் கவனியுங்கள்.  மற்ற குடும்ப உறுப்பினர்களின் இருப்பை உறுதி செய்வதற்காக இளம் யானை எவ்வாறு சரிபார்க்கிறது.  நமது சொந்தக் குடும்பங்களைப் போலவே இருக்கிறது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

Tags : மனிதனை போன்று யானைகள் குடும்பத்தை பாதுகாக்கும் விதம் வீடியோ வைரல்.

Share via
Logo