ஹேக்கர்ஸிடம் இழந்த பணத்தை திரும்ப பெற முடியுமா..

by Staff / 23-04-2023 01:27:59pm
ஹேக்கர்ஸிடம் இழந்த பணத்தை திரும்ப பெற முடியுமா..


நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது.எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இதன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. எனவே UPI அல்லது நெட் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தும் போது உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.இந்நிலையில் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஹேக்கர்ஸ் எடுத்துவிட்டால், தாமதிக்காமல் உடனே சைபர் கிரைம் பிரிவை 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். இப்படி செய்தால் இழந்த பணத்தை 100% திரும்பபெற முடியும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல், வங்கி கஸ்டமர் கேரிலும் புகாரளிக்க வேண்டும். அச்சமயம் Customer care NO-ஐ கூகுளில் தேடக் கூடாது, போலியான எண்களை தொடர்பு கொண்டு மேலும் பணத்தை இழக்க நேரிடலாம்.

 

Tags :

Share via