அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்- அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட  900 பேர் மீது வழக்கு.

by Editor / 07-01-2024 10:14:49am
 அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்- அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட  900 பேர் மீது வழக்கு.

ராணிப்பேட்டை அடுத்த  முத்துக்கடை பேருந்து நிலையத்தில்  மேல்விஷாரம் நீர்ப்பிடிப்பு பகுதியில் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்ட 528  வீடுகளில் வசித்த குடும்பங்களுக்கு ஓராண்டு ஆகியும் மாற்று இடம் வழங்காததை கண்டித்தும்  உடனடியாக இடத்தை வழங்க கோரியும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை  கண்டித்து அ.தி.மு.க மேற்கு மாவட்டம் சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த முன்னாள் அமைச்சர் கே..சி.. வீரமணி மற்றும் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்..எம்.. சுகுமார் உள்ளிட்ட  900 பேர் மீது ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்..

 

Tags : முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட  900 பேர் மீது வழக்கு.

Share via

More stories