விஜய் பிரச்சார வாகனத்தை கைப்பற்றி கரூர் சி.பி.ஐ முகாம் அலுவலகத்தில் வைத்து ஆய்வு.

by Admin / 10-01-2026 11:10:44am
விஜய் பிரச்சார வாகனத்தை கைப்பற்றி கரூர் சி.பி.ஐ முகாம் அலுவலகத்தில் வைத்து ஆய்வு.

கரூரில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பரப்புரை நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது 

அடுத்து சிபிஐ கரூரில் சிறப்பு முகாமிட்டு விசாரணையை தொடர்ந்தனர். சிபிஐ தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா,கரூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோரை விசாரணைக்கு அழைத்தனர். அதனைத் தொடர்ந்து அருகிலுள்ள சி.சி.டி.வி காட்சிகள் காவல்துறையினர் மின்சார வாரியத் துறையினர் என சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரித்து வந்தனர்.  இந்நிலையில் டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் இருந்து வந்த சம்மனை எதிர்கொள்ளும் விதமாக பொதுச் செயலாளர் ஆனந்த் அர்ஜுனா நிர்மல் குமார் மூவரும் டெல்லி அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜர் ஆயினர். இதனைத் தொடர்ந்து கட்சி தலைவர் விஜய்க்கு சிபிஐ பன்னிரண்டாம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தது. நாளை மறுநாள் அவர் டெல்லியில் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலையில், தற்பொழுது அவர் பயன்படுத்தும் பிரச்சார வாகனத்தை சிபிஐ சென்னை பனையூர் அலுவலகத்திலிருந்து கைப்பற்றி கரூர் சிபிஐ முகாம் அலுவலகத்தில் வைத்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்.. சி.பி.ஐ ஆய்வுக்கு உட்படுத்த பட்ட பிரச்சார வாகனத்தை இனி வழக்கு முடியும் வரை விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் பிரச்சார வாகனத்தை கைப்பற்றி கரூர் சி.பி.ஐ முகாம் அலுவலகத்தில் வைத்து ஆய்வு.
 

Tags :

Share via

More stories