.3.00 மணி நிலவரப்படி70 சதவீத வாக்கு பதிவு நடைபெற்று இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

by Admin / 23-04-2026 04:14:53pm
.3.00 மணி நிலவரப்படி70 சதவீத வாக்கு பதிவு நடைபெற்று இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் வாக்குப்பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.3.00 மணி நிலவரப்படி எழுவது சதவீத வாக்கு பதிவு நடைபெற்று இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 70 சதவீதத்திற்கு மேல் வாக்குப் பதிவாகியுள்ளது. இன்னும் வாக்கு பதிவிற்கான காலம் அதிகமாக இருப்பதால் குறைந்தபட்சம் 85 விழுக்காடு வாக்குப்பதிவு நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம்  63சதவீதத்திற்கு மேலே சென்று கொண்டிருக்கிறது.63 இருந்து 70 சதவீதத்திற்கு மேல் வாக்கு பதிவாகி உள்ளது

.5.73 கோடி வாக்காளர்களின் 4 கோடிக்கு மேல் வாக்களித்து உள்ளார்கள். இந்தத் தேர்தலில் அபரிவிதமான வாக்குப்பதிவுகள் நடைபெறுவதால் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற யூகங்களை சொல்ல முடியாத அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது.

ஒரு கட்சியினரும் அதிக வாக்குப்பதிவு தங்களுக்கு சாதகமாக உள்ளதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கடந்த தேர்தலில் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் மக்கள் அதிகமாக ஆர்வம் கொண்டு வாக்களித்து வருவதனால் எதன் பொருட்டு என்கிற இந்த வேகமெடுப்பு என்கிற கேள்வி எழுகிறது. இளம் வாக்காளர்கள் அதிகமாக வாக்குப்பதிவில் ஆர்வம் காட்டி உள்ளனரா இல்லை இதுவரை வாக்களிப்பதை ஒரு பெரும் பொறுப்பாக- கடமையாக கொள்ளாதவர்களும் இந்த தேர்தலில் ஆர்வம் கொண்டு வாக்களித்து உள்ளார்களா என்கிற கேள்வி எழுகிறது.

 

Tags :

Share via
Logo