பொன்முடிக்கு எதிரான மனு தள்ளுபடி

by Editor / 22-04-2025 03:58:42pm
பொன்முடிக்கு எதிரான மனு தள்ளுபடி

பெண்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில் அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொன்முடி தரப்பு வழக்கறிஞர் வாதம் முன்வைத்த நிலையில், இதனை ஏற்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. அண்மையில் த.பெ.தி.க. சார்பில் நடந்த கூட்டத்தில் பொன்முடி, பெண்கள், சைவம், வைணவம் குறித்து ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

 

Tags :

Share via