பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு-இந்திய ராணுவம் திறம்பட பதிலடி.

by Editor / 30-04-2025 09:26:28am
பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு-இந்திய ராணுவம் திறம்பட பதிலடி.

பஹல்காம் தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், பாரமுல்லா, குப்வாரா எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பர்க்வால் செக்டரில் உள்ள சர்வதேச எல்லையைத் தாண்டியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் திறம்பட பதிலடி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், உயிரிழப்புகள் எதுவும் இல்லை என இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags : எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு

Share via