பால் விலையை ரூ.2 உயர்த்திய மத்திய அரசின் மதர் டெய்ரி நிறுவனம்.

மதர் டெய்ரி நிறுவனம், மத்திய அரசின் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. உ.பி.யின் நொய்டாவை மையமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கோடையில் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மதர் டெய்ரி தினசரி 35 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்கிறது. டெல்லியில் டோன் செய்யப்பட்ட பால் லிட்டருக்கு ரூ.54-லிருந்து ரூ.56 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முழு கிரீம் பால் ரூ.68-லிருந்து ரூ.69 ஆக உயர்ந்துள்ளது.
Tags : பால் விலையை ரூ.2 உயர்த்திய மத்திய அரசின் மதர் டெய்ரி நிறுவனம்.