புளியங்குடியில் பலாத்காரம் முயற்சியில் இளம் பெண் கொலை போதை வாலிபர் கைது காவல்துறை அதிரடி.

by Editor / 21-12-2023 11:26:42pm
புளியங்குடியில் பலாத்காரம் முயற்சியில் இளம் பெண் கொலை போதை வாலிபர் கைது காவல்துறை அதிரடி.

தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி முத்து மாரியம்மன் கோவில் ஒன்பதாவது தெருவில் வசிப்பவர் மாரியம்மாள் இவர் தனது மகன் மகாலட்சுமியுடன் தனியாக வீட்டில் வசித்து வருகிறார் மகாலட்சுமி புளியங்குடியில் உள்ள ஒரு கடையில்  வேலை செய்து வருகிறார் கடந்த ஞாயிற்றுக்கிழமை 17 ஆம் தேதி அன்று மகாலட்சுமி வேலை முடித்து வீடு திரும்பாததால் மாரியம்மாள் உறவினர் வீடுகளில் எல்லாம் தேடினார் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில் மறுநாள் காலையில் திங்கள்கிழமை அன்று சிந்தாமணியில் மாரியப்பன் என்பவர் தோட்டத்தில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு அரை நிர்வாண நிலையில் கிடப்பது தெரிய வந்தது தகவல் அறிந்த புளியங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைவினான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர் விசாரணையில் பிணமாகக் கிடந்தவர் மாரியம்மாரின் மகள் மகாலட்சுமி என்பது தெரியவந்தது. சம்பவத்தன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மகாலட்சுமி வேலை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது மழை பெய்தால் திருவிழா ஆள் நடமாட்டம் இல்லை அதனை பயன்படுத்தி மர்ம நபர் மகாலட்சுமி அருகில் உள்ள வயலில் உள்ள நீரில் அழுத்தி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர் ஆனால் தொடர்ந்து குற்றவாளியை பிடிக்க டிஎஸ்பி தலைமையில் பல்வேறு வழிகாட்டுதலில் உதவி ஆய்வாளர் சஞ்சய் காந்தி, உடையார், விஜயபாண்டி, முருகேசன், பால்ராஜ், சிசிடிவி காட்சியில் ஆய்வு  மேற்கொண்டனர். இதில் மகாலட்சுமியை  ஒரு நபர் பின் தொடர்ந்து செல்வதும் தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து அவரை பிடித்து நடத்திய விசாரணையில்  தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த நபர் சிந்தாமணி அம்பேத்கர் சேர்ந்த முருகன் மகன் கருப்பசாமி என்பதும் ஞாயிறு இரவு மதுபோதையில் இருந்ததும் அப்போது மகாலட்சுமி வேலை முடித்து வீட்டுக்கு வரும் வழியில் அவரை வழிமறித்து உறவுக்கு அழைத்ததாகவும் அவர் மறுத்ததால் வழியில் உள்ள வயல் வெளியிலுள்ள நீரில் தள்ளி பாலியல் பலாத்கார  முயற்சி ஈடுபட்டு அவரை கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது இதன் தொடர்ச்சியாக போலீசார்  கருப்பசாமியை  கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : புளியங்குடியில் பலாத்காரம் முயற்சியில் இளம் பெண் கொலை போதை வாலிபர் கைது காவல்துறை அதிரடி.

Share via