யார் அந்த சார்? - கையில் சிலம்புடன் விளாசிய குஷ்பு
இத்தனை போலீசை வைத்திருக்கும் நீங்கள் அந்த சாரை கண்டுப்பிடிக்க முடியவில்லையா? என்று பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு சரமாரி கேள்வியெழுப்பியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து மதுரையில் தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட குஷ்பு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்கிடையே பேசிய குஷ்பு, திமுகவினர் பயத்தில் உள்ளார்கள். இவ்வளவு பெரிய கொடுமை நடந்தும் முதலமைச்சர் பார்த்தும் பார்க்காமல் உள்ளார் என்றார்.
Tags :