கொரோனா சிகிச்சை கட்டணம் குறைப்பு

by Editor / 12-08-2021 11:41:54am
கொரோனா சிகிச்சை கட்டணம் குறைப்பு

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வசூலிக்கப்படும் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அரசால் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது

தற்போது கொரோனாதொற்று குறைந்து வரும் நிலையில், சிகிச்சைக்கான கட்டணத்தை குறைத்து மாற்றியமைக்கப்பட்ட கட்டண விவரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தீவிரமில்லாத ஆக்ஸிஜன் அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.3,000, தீவிரமில்லாத ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு ரூ.7,000, வெண்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.15,000 என்று கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள கட்டணம், 2 மாதங்களுக்கு பின் மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via