இரு சமூகத்தினரிடையே நிகழ்ந்த ஜாதிய மோதல்

by Staff / 14-07-2024 02:05:15pm
இரு சமூகத்தினரிடையே நிகழ்ந்த ஜாதிய மோதல்

கரூர் மாவட்டம் பொய்யாமணி கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக ஒரு சமூகத்தினர் வைத்த பேனரை மற்றொரு சமுகத்தின் கிழித்ததால் எழுந்த பிரச்னையையடுத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அதில் உடன்பாடு எட்டாமல் இரு சமூகத்தினரும் ஒருவரை ஒருவர் கட்டைகளால் தாக்கிக்கொண்டனர். மேலும் தாக்குதல் நடத்திய சில இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via