இன்றுடன் புரட்டாசி மாத சனி முடிவடைவதால் ,திருப்பதியில் பக்தர்களின் கூட்டம்
இன்றுடன் புரட்டாசி மாத சனி முடிவடைவதால் ,திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.பெருமாளைவழிபடும் மாதங்களில் புரட்டாசி மாதம் முக்கியமானது.மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா அர்ஜினனுக்கு கீதாஉபதேசத்தில் சொல்லுவார்.ஆனால்,அந்த மாதங்க ளில் எந்தவிதமான வழிபாட்டு கட்டுபாடுகள் சொல்லப்படுவதில்லை.கலியுக நாயகனான எம் பெருமான் ஏழுமலையில் வாசம் கொண்டு பக்தர்களின்இன்னல் துடைத்து கேட்போருக்கு கேட்கின்ற வரமருளும் ஸ்ரீ வெங்கட கிரியானை தரிசிக்க...புரட்டாசி மாதத்தி ல்மட்டும் மாமிச உணவு தவிர்த்து வழிபா டு நிகழ்த்தும் முறை காலகாலமாகப் பின்பற்றி வருகின்றனர் மக்கள்...அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக விரதமாகிய புலால் உணவு தவிர்த்தோர் இன்று நான்குவது சனியில் பெருமாளுக்கு படையலிட்டு சேவித்து வழிபடும் நாள்.
Tags :