கம்பி வேலியில் சிக்கி மான் பரிதாபமாக உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் வேட்டைக்காரங்குளம்- மேலமெய்ஞானபுரம் செல்லும் வழியில் மேலப்பாவூர் பகுதியில் இருந்து வந்த ஐந்து வயது மதிக்க தக்க மான் ஒன்று சாலையை கடக்க முற்பட்டபோது சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியில் மானின் கொம்புகள் மற்றும் உடல் பகுதி சிக்கிக்கொண்டது. இதனால் மானின் உடல் பகுதியில் இருந்து ரத்தம் வழிய தொடங்கியுள்ளது. உயிருக்கு போராடிய மானை கண்ட வாகன ஓட்டிகள் மானை மீட்க முயற்சி செய்து வனத்துறை இடம் தகவல் கொடுத்துள்ளனர். வனத்துறையினர் தகவல் அறிந்து வரும் முன்பே மான் ஆனது பரிதாபமாக உயிரிழந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வன துறையினர் மானை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags : கம்பி வேலியில் சிக்கி மான் பரிதாபமாக உயிரிழப்பு